டிப்பர் வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதியதில் 16 வயது மாணவி பலி

Prathees
4 years ago
டிப்பர் வாகனம்-  மோட்டார் சைக்கிள் மோதியதில் 16 வயது மாணவி பலி

திவுலபிட்டிய-கொட்டாதெனியாவ பிரதான வீதியின் ஹீரலுகெதர பிரதேசத்தில் நேற்று (17) டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திவுலப்பிட்டிய பின்னலந்தவத்தையைச் சேர்ந்த  தில்சி தில்ஹாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி திவுலபிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை இறந்தவரின் தாயாரே ஓட்டியுள்ளார்.

கொட்டதெனியாவயில் இருந்து திவுலப்பிட்டிக்கு கல் தூள் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனம் ஒன்று பயணித்துள்ளது.

டிப்பர் வாகனத்தின் பின்புறம் மோட்டார் சைக்கிள் பயணித்துள்ளது

 டிப்பர் வாகனத்தை முந்திச் சென்று மாற்றுப்பாதையில் செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவியின் தலையில் டிப்பர் மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உயிரிழந்த பாடசாலை மாணவியின் தாயார் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனத்தை கவனக்குறைவாக செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

பிரேத பரிசோதனை இன்று (18) நடைபெறும் என கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாரதியை இன்று (18) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4