ஜே.வி.பி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
#SriLanka
#Sri Lanka President
Mugunthan Mugunthan
3 years ago

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கீழ் இயங்கும் சோசலிச இளைஞர் சங்கம் ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும், எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு திரும்ப வழங்க வேண்டும், யுகதானவி மின் நிலையத்தை உடனடியாக கையகப்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
மருதானையிலிருந்து ஆரம்பமான போராட்டம் கோட்டை ஊடாக ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்தது.
போராட்டத்தால் சுற்றுவட்டார சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



