இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த தாய்க்கு நேர்ந்த அவலம்

Nila
4 years ago
இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த தாய்க்கு நேர்ந்த அவலம்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மேல் மாகாண ஒருஹாடாமாவத்தை பிரதேசத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக , 2 Km நீளமான வரிசை காணப்பட்டது.

குறித்த நீண்ட வரிசையில் காத்திருந்த தாய் ஒருவர்,வெயில் மற்றும் களைப்பால் மயங்கி வீழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், சில இடங்களில் மக்கள் இரவு முழுவதும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிரில் வரிசைகளில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நகர புறங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எதிரில் இதனை பரவலாக காண முடிவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில் கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்ய மக்கள் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்றுள்ளனர்.

இதன்போது, மயங்கி விழுந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4