கனவில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா..?

Nila
1 year ago
கனவில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா..?
  • கனவும் முத்தமும் :

நமக்கு வரக்கூடிய கனவுகள் ஒரு சில நேரங்களில் நம் வாழ்க்கையின் யதார்த்தத்தைக் குறிப்பிடுவதாக இருக்கும். சில நேரங்களில் அந்த கனவும் நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூட்டியதாகவும், சில நேரங்களில் தேவையற்ற பயத்தை உண்டாக்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிவில் நாம் ஒருவருக்கு முத்தமிடுவது போன்று கனவில் வந்தால், அப்போதும் அவருக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

  • கனவில் ஒருவரின் கன்னம், நெற்றியில் முத்தமிடுவது : 

கனவில் நீங்கள் ஒருவரின் உதடுகளில் முத்தமிட்டால் அது நற்பலனைத் தரக்கூடியதாக இருக்கும். அதாவது அந்த கனவால் உங்கள் நிஜ வாழ்க்கையில் ஒரு புதிய உறவு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கும். அடிக்கடி அதே கனவு வருகிறது என்றால் நீங்கள் நீண்ட காலமாக வாங்க நினைத்த பொருள், வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும். அல்லது உங்கள் வாழ்வில் புதிய உறவு வர வாய்ப்புள்ளது.

  • வேறொருவரின் காதலி அல்லது காதலனை முத்தமிடுவதாகக் கனவு

உங்கள் கனவில் நீங்கள் வேறொருவரின் காதலி அல்லது காதலனை முத்தமிட்டால் அல்லது வேறொருவரின் மனைவி அல்லது கணவரை முத்தமிட்டால், நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒருவித புதிய உறவை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். இருப்பினும் நீங்கள் கனவில் கண்டதைப் பற்றி அடிக்கடி சிந்தித்து, உங்களின் ஒழுக்கமான வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

  • நீங்கள் விரும்பாத ஒருவரை முத்தமிடும் கனவு

நிஜ வாழ்க்கையில் உங்களுக்குப் பிடிக்காத ஒருவரை நீங்கள் கனவில் முத்தமிடுவது போல கனவு கண்டால் இனி வரும் காலங்களில் நீங்கள் செய்ய விரும்பாத இதுபோன்ற சில வேலைகளை கட்டாயத்தின் பேரில் செய்ய வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போதாவது அத்தகைய கனவு கண்டால், நீங்கள் நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

 

  • கனவில் பிரெஞ்சு முத்தம்

நீங்கள் உங்கள் கனவில் யாரையாவது பிரஞ்சு முத்தமிடுவது போல அதாவது உதட்டோடு, உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால், நிஜ வாழ்க்கையில் நீங்கள் உங்கள் உணர்வுகளை இன்னும் நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும். நிஜ வாழ்க்கையில் ஒழுக்கமான வாழ்க்கை வாழவும், உங்கள் உறவுகளுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் காட்ட வேண்டும்.

உங்கள் துணை உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் போகலாம், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் வெளிப்படையாக உங்கள் மனக்குறையை அவர்களுக்கு தெரியப்படுத்துவது நல்லது.

  • கனவில் உங்களுக்கு பிடித்த அல்லது அன்பான நபரைப் பார்ப்பது

நிஜ வாழ்க்கையில் நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரைக் கனவில் காண்பது என்பது நீங்கள் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பை விரைவில் பெறுவீர்கள் என்பதைக் குறிப்பதாகும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த பொன்னான வாய்ப்பு விரைவில் உங்கள் கைக்கு வரும்.

 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு