சம்பளம் கொடுக்க பணமில்லை: திறைசேரியிடம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை

Prathees
4 years ago
சம்பளம் கொடுக்க பணமில்லை: திறைசேரியிடம்  இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சம்பளம் மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளை செலுத்துவதற்காக 240 மில்லியன் ரூபாவை வழங்குமாறு பொது திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான செலவுகளை ஈடுகட்ட பணம் கோரப்பட்டுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வருவாய் குறைந்துள்ளதாகவும் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு போதிய வருமானம் இல்லை எனவும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம்  திறைசேரிக்கு அறிவித்துள்ளது.

தற்போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி சுமார் 65 மில்லியன் ரூபாவாகும்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 900 பேர் பணிபுரிவதுடன், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மாதம் 90 மில்லியன் ரூபாய்  செலவிடப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4