நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Mayoorikka
4 years ago
நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து 15ஆம் திகதி நள்ளிரவு முதல்  விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் எரிபொருள் போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், போக்குவரத்துக்கான கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், “டீசல் விலை அதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின் போது கருத்திற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், டீசல் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பையும் கருத்தில் கொண்டு தங்களுடைய கட்டணத்தையும் திருத்தியமைக்குமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அந்தக் கோரிக்கைக்கு இணங்கியிருக்கவில்லை.

இதன் காரணமாக இன்று நிலுவையில் உள்ள எரிபொருள் கையிருப்புகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4