விவசாயத்தில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் - ஜனாதிபதி

#Sri Lanka President #Gotabaya Rajapaksa
Reha
4 years ago
விவசாயத்தில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் - ஜனாதிபதி

பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் என் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறு போகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் நீண்டகாலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளன.

அவை தொடர்பான அறிவையும் தரமான உற்பத்திகளையும் விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், எதிர்பார்த்த பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், வாரத்திற்கு 2 தடவைகள் அரசாங்க அதிபர்கள் தலைமையில் உரக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4