எதிரணியின் முற்றுகையால் முற்றாக முடங்கியது காலி முகத்திடல்!

Mayoorikka
4 years ago
எதிரணியின் முற்றுகையால் முற்றாக முடங்கியது காலி முகத்திடல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வருகைத் தந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"நாடு அழிந்தது - போதும் போதும். மேலும் அழிவை அனுமதிக்க முடியாது" என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படுகிறது. 

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வைக் கோரி,  இரண்டு பிரதான வீதிகளின் ஊடாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள காலி முகத்திடலை நோக்கி பேரணியாகச் சென்றுள்ள  ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4