மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடும் அரசாங்கம்! சரத் பொன்சேகா

#Sarath Fonseka
Mayoorikka
3 years ago
மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடும் அரசாங்கம்! சரத் பொன்சேகா

தற்போதும் ஆட்சியாளர்கள் மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சீனாவிடம் கொரோனா தடுப்பூசி கொள்வனவு, இந்தியாவிடம் திரவ உரம் கொள்வனவு, மியன்மாரிடம் அரிசி கொள்வனவு என, அனைத்து கொள்வனவுகளுக்கும் பெறுமதிக்கு அதிக பணம் கொடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில், ஐ.எம்.எப் சென்றால் அவர்களிடம் வாங்கும் பணத்துக்கு கொள்வனவு செய்யப்படும் விடயங்கள் குறித்து முறையான கணக்கு காட்ட வேண்டும் என்பதால் அதனை செய்ய அரசாங்கத்துக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!