வீடு எரியும்போது பெற்றோலை ஊற்றி அணைக்க நினைத்த தளபதி விஜய்யின் அப்பா சந்திரசேகர்.

#Cinema #Director
Prabha Praneetha
4 years ago
வீடு எரியும்போது பெற்றோலை ஊற்றி அணைக்க நினைத்த தளபதி விஜய்யின் அப்பா சந்திரசேகர்.

எரியும் நெருப்பில் லிட்டர், லிட்டராக பெட்ரோலை ஊற்றிவிட்டார் எஸ்.ஏ. சந்திரசேகர் என பேச்சு கிளம்பியிருக்கிறது.

எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், அவரின் செல்ல மகன் விஜய்க்கும் இடையே பிரச்சனையாக இருப்பது அனைவருக்கும் தெரியும். சில மாதங்களாக அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே பேச்சுவார்த்தையே கிடையாது.

விஜய் ஒரு விஷ வளையத்தில் சிக்கியிருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் எஸ்.ஏ.சி. இந்நிலையில் தன் வாழ்க்கையை பற்றி பேசி வீடியோ எடுத்து அதை யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

முதல் வீடியோவில் பிளாட்பார்மில் அமர்ந்திருந்தார். இரண்டாவது வீடியோவில் இறந்துபோன தன் மகள் வித்யா பற்றி பேசினார். எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி பிளாட்பார்மில் இருப்பதும், வித்யா பற்றி பேசுவதும் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

என்னை கடுப்பேற்றி பார்க்கவே இந்தப்பா இப்படி எல்லாம் செய்கிறார் என்று கோபமும், வேதனையும் படுகிறாராம் விஜய். யார் இந்த எஸ்.ஏ. சி. என்கிற பெயரில் சந்திரசேகர் வெளியிடும் வீடியோக்களால் அப்பா, மகன் இடையேயான விரிசல் மேலும் பெரிதாகியிருக்கிறதாம்.

மகனுடன் சேர முடியாத ஆதங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி செய்கிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. தன் அப்பா தெருவில் நின்று வீடியோ வெளியிடுவது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4