காகிதம் கொண்டு வர டொலர் இல்லை.. பாட புத்தகங்கள் அச்சிடுவது முற்றிலும் நிறுத்தம்

Prathees
4 years ago
காகிதம் கொண்டு வர டொலர் இல்லை.. பாட புத்தகங்கள் அச்சிடுவது முற்றிலும் நிறுத்தம்

காகித தட்டுப்பாட்டால் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது

அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் இதனைத் தெரிவிக்கின்றார்.

பள்ளி பாடப்புத்தகங்களின் நான்கு மில்லியன் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெட்ரிக் டன் காகிதம் தேவை. 

 ஒரு மெட்ரிக் தொன் காகிதத்தின் விலை 200,000 ரூபாவிலிருந்து அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூட்டுத்தாபனத்திற்கு பாடசாலை  பாடப் புத்தகம் அச்சடிப்பதுதான் முக்கிய வருமானமாக உள்ளது.

அதை இழந்தால், சுமார் 1,200 மில்லியன் ரூபாயை நிறுவனம் இழக்க நேரிடும்.

மேலும் அரச நிறுவனங்களுக்கு ஆவணங்களை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு லாட்டரிகள் அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாட்டால் காகித இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக காகித இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4