இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி

Prabha Praneetha
4 years ago
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (13) மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 வலயங்களுக்கு 03 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும், 08 வலயங்களுக்கு ஒரு மணித்தியாலயமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் மாலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு மாலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4