வடக்கு மீனவர்களுக்கு நிவாரணப் பொதிகள்! - நாளை வழங்குகின்றார் இந்தியத் தூதுவர்

Prasu
4 years ago
வடக்கு மீனவர்களுக்கு நிவாரணப் பொதிகள்! - நாளை வழங்குகின்றார் இந்தியத் தூதுவர்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, நாளை (13) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்திலும், பிற்பகல் 2 மணியளவில் மன்னாரிலும் மாவட்ட செயலகங்களில் வைத்து மீனவர்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கிவைக்கவுள்ளார்.

வடக்கு மீனவர்கள எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்திய அரசால் 5 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியிலான நிவாரணப் பொதிகள் இந்தியத் தூதுவரால் வழங்கிவைக்கப்படவுள்ளன.

இந்தப் பொதிகளில் யாழ்ப்பாணம் மீனவர்களுக்கு 600 பொதிகளும், மன்னார் மீனவர்களுக்கு 200 பொதிகளும் அனுமதிக்கப்பட்டபோதும் இந்தியத் தூதுவரின முன்னிலையில் இரு மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட தலா 30 மீனவர்களே அழைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியவை தொடர்பான ஏற்பாடுகளில் மன்னாரில் மேலும்70 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4