விமல், கம்மன்பில தேர்தல் வரும்போது எம்மை நாடுவர்! - மஹிந்த நம்பிக்கை

#Mahinda Rajapaksa #Wimal Weerawansa
Prasu
4 years ago
விமல், கம்மன்பில தேர்தல் வரும்போது எம்மை நாடுவர்! - மஹிந்த நம்பிக்கை

"முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தேர்தலொன்று வரும்போது எங்களைத் தேடி வருவார்கள்."

- இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் மீண்டும் அரசுக்குள் வரும் வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

"அவர்கள் வெளியில் தனியாக நின்று என்ன செய்ய முடியும்? தேர்தலொன்று வந்தால் அவர்கள் ஏதாவது பிரதான கட்சியுடன்தான் ஒட்ட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ அவர்களை அரவணைக்காது. கடந்த தேர்தலில் அவர்களே பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

எனவே, தேர்தலொன்று வருமாயின் எங்களிடம் அவர்கள் வரவேண்டி வரும். ஆகவே, பார்ப்போம்'' - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4