இலங்கை மக்களின் தங்க நகைகளை அபகரிக்க போகும் அரசு ..?

#SriLanka
Nila
4 years ago
இலங்கை மக்களின் தங்க நகைகளை அபகரிக்க போகும் அரசு ..?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொரிய நாட்டு மக்களை போன்று இலங்கை மக்களும் நாட்டிற்காக உதவ வேண்டும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் போது நன்மை ஏற்படும் என்று இல்லை. பாதகமான நிலையில் மக்களும் உதவ முன்வர வேண்டும். கொரியாவில் பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த போது மக்கள் எப்படி உதவினார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள். வங்குரோத்து அடைந்த கொரிய நாட்டை மீட்டெடுக்க மக்கள் முன்வந்தார்கள். தமது காதுகளில் கழுத்துகளில் இருந்த தங்க நகைகளை வழங்கினார்கள் என அமைச்சர் சீ.பி.

ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதுபோன்றதொரு செயலை இலங்கை மக்களும் செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4