ஒரு கிலோ அரிசி 300 கிலோவாக அதிகரிக்கும்: வறிய மக்கள் குழியில் விழுந்து பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாது

Prathees
4 years ago
ஒரு கிலோ அரிசி 300 கிலோவாக அதிகரிக்கும்: வறிய மக்கள் குழியில் விழுந்து பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாது

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50% வரை அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் உள்ளூர் அரிசியின் விலையும் அதற்கேற்ப அதிகரித்து கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவை நெருங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

சீனிஇ பால் பவுடர், மரக்கறிகள், எரிவாயு, எரிபொருள், பாண், பணிஸ், ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், செருப்புகள் போன்றவற்றின் விலை 35மூ முதல் 70மூ வரை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கார்கள், சிமென்ட், டைல்ஸ் மற்றும் மின்சாதனங்களும் கட்டுப்பாடின்றி உயரும், என்றார்.

இந்த நிலையில், நாட்டின் பணவீக்கம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயரும்

இவ்வாறான சூழ்நிலையில் மிகவும் வறிய மக்கள் குழியில் விழுந்து பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாதது என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4