என்றுமில்லாதவாறு எரிபொருள் விலையை அதிகரித்தது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

#SriLanka #Fuel #prices
என்றுமில்லாதவாறு எரிபொருள் விலையை அதிகரித்தது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இன்று முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அதற்கமைய ஒக்டென்  92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.

ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 76 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி, ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும்.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி, லங்கா ஒட்டோ டீசலின் லீற்றர் ஒன்றின் புதிய விலை 176 ரூபாவாகும்.

மேலும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4