பிரபல தொலைக்காட்சி நடிகைகளை பயன்படுத்தி விபச்சார விடுதி. நடிகை மற்றும் முகாமையாளர் கைது

Prathees
4 years ago
பிரபல தொலைக்காட்சி  நடிகைகளை பயன்படுத்தி  விபச்சார விடுதி. நடிகை மற்றும் முகாமையாளர் கைது

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நில்பனகொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் தளத்தில் விபச்சார விடுதி நடத்தி வந்த முகாமையாளரும் தொலைக்காட்சி நாடக நடிகையும் 10ம் திகதி வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மினுவாங்கொடை நில்பனாகொட அழுதபொல பிரதேசத்தில் டெலி நாடக நடிகைகளை பயன்படுத்தி விபச்சார விடுதி ஒன்று நடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு சுற்றிவளைத்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய நாட்களில் சுமார் நான்கு பேர் வேலை பார்ப்பதாகவும்இ மின்சாரம் இல்லாததால் பலர் தப்பியோடி இருக்கலாம் என்றும் பொலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொலைக்காட்சி நாடகங்களில் பாதுகாவலராக நடிக்கும் நபர் ஒருவரே விபச்சார விடுதி நடத்த விடுதியை நடிகைகளுக்கு வழங்கி உள்ளதாக  பொலஜசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட நடிகை முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை இல்லை என்றும்இ இந்த இடத்திற்கு வரும் மற்ற நடிகைகள் தொடர்பாக  அதிகாரிகள் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4