வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

Prasu
4 years ago
வார இறுதி  நாட்களிலும் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாட்களில் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளை (12) முற்பகல்10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்த வலயங்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதற்கிடையில், P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு இடையே நாளை மறுதினம் (13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4