கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஆம். தின்னலாம்... துணிவுடன் இருங்கள். காதல் விதிகள். பாகம் - 14.

#Love #Article #Tamil People
கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஆம். தின்னலாம்... துணிவுடன் இருங்கள். காதல் விதிகள். பாகம் - 14.

பெற்றோர்கள் மீது முழுதாக அன்பு வைத்திருக்கும் அதேசமயத்தில் காதலியும் ஜெயிக்க நினைக்கும் நபர்கள்தான் அதிகம்.  பெற்றோர்களிடம் சம்மதம் வாங்குவது மிகக்கடினமா? இல்லவே இல்லை.  ஏனென்றால், பெற்றோரை எதிர்த்து திருமணம் முடித்த எத்தனையோ நபர்கள், பின்னாளில் ஒரே குடும்பமாக மாறி இருப்பதை அறிகிறோம்.

முக்கியமாக, காதல் திருமணம் முடிப்பவர்களுக்கு ஒரே குழந்தை பிறந்துவிட்டால், அதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஒன்று சேர்பவர்கள் மிக அதிகம்.  இது ஏன் தெரியுமா? இரண்டு பக்கமும் பாசம் இருக்கும்.  ஆனால் தனக்கு முடிவு எடுக்கும் சந்தர்ப்பத்தை ஆரம்பகால கோபமாக இருக்கும்.  அதனால் பாசம் நிறைந்த பெற்றோர்களை சம்மதிக்கவைப்பது மிக எளிது.  வாருங்கள் அதற்கா வழிமுறைகளைப் பார்ப்போம்.

ஒருவரை வெல்லுங்கள்

தாய், தந்தை ஒருவரிடமும் நீங்கள் சம அளவு பாசமாகவே இருக்கலாம்.  ஆனால் இவர்கள் இருவரில் யார் காதல் போன்ற சீரியஸ் விஷயங்களை ஓரளவாவது ஏற்றுக்கொள்வார்கள் என பார்த்து அவர்களை மட்டும் எப்படியாவது உங்கள் பக்கம் இழுக்க வேண்டும்.

தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, அவர்களிடம் தனிமையில் இருக்கும்போது, நன்றாக பேசும் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  ‘ஒரு ஆசை இருக்கு.  நிறைவேறுமா இல்லையான்னு தெரியாது இருந்தாலும் உங்க கிட்டே சொல்றேன்.  நீங்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிறேன்’ என்று சொல்லி உங்களுக்கு விருப்பமான நபரைப் பற்றி சொல்லுங்கள்.  அவர்களது முடிவை உடனடியாகச் சொல்லும்படி வற்புறுத்தாதீர்கள்.  நிதானமாக யோசித்து நீங்கள் எப்படி சொல்கிறீர்களா அப்படி நடக்கிறேன் என பேசுங்கள்.

கண்டிப்பா ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  ‘விருப்பமானவரை மறந்துவிடு  என்றுதான் சொல்வார்கள்.  நீங்களும் ‘சரி’ என்று சொல்லி தலையாட்டிவிட்டு நிஜமாகவே உங்களவரிடம் விஷயத்தைச் சொல்லி, சந்திப்புகளை தவிருங்கள்.  ஆனால் எப்போதும் காதல் நினைவில் இருப்பதுபோலவும், சோகத்தில் வாடியிருப்பதாகவும் நடிக்கவாவது செய்யுங்கள்.

நல்ல விஷயத்துக்காக கொஞ்சம் நடித்தால் தப்பில்லை.  நிஜமாகவே நீங்கள் காதலை தொடராமல் இருக்கிறீர்கள் என ஊர்ஜிதமானால், கண்டிப்பாக உங்களிடம் இறங்கி வருவார்கள்.
அவர்கள் சொன்னதைக் கேட்பதற்காக காதலைப் பரிசாகத் தருவதற்கு சம்மதம் தருவார்கள்.  இதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆகலாம்.  ஒரு சிலர் உடனே தரலாம்.  ஆனாலும் பொறுமையாக உறுதியோடு காத்திருங்கள்.

முடிவு அவர்களிடம்

‘எனக்கு விருப்பமானவர் எவர் என கண்டுகொண்டேன்.  அவருடன் திருமணம் செய்துவைக்க வேண்டியது உங்கள் கடமை.  என்னை எப்படியாவது அவருடன் சேர்த்து வையுங்கள்’ என உறுதியாகச் சொல்லுங்கள்.  காதல் நிறைவேறுவதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கத் தயாராக இருப்பதாக சொல்லி அதை கடைபிடியுங்கள்.

பெற்றோரிடம் பேசும் முன், உங்களவரிடம் பேசி காத்திருக்கவும், காதலில் உறுதியாகவும் இருக்கச் சொல்ல வேண்டும்.  ஏனெனில் சில பெற்றோர்கள், ‘உன்னால்தான் என் பிள்ளை கெட்டப் போய் விட்டாள்.  அவள் இப்போது காதலில் இல்லை.  தயவு செய்து விலகிப் போய்விடு’ என நேரடியாகவே குண்டு போடுவார்கள்.  இதனை சமாளிக்கும் தைரியமும், நம்பிக்கையும், உறுதியும் இருவரிடமும் இருக்க வேண்டியது மிக அவசியம்.

உண்மையில் பெற்றோர்கள் மீது நல்ல நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், மிகத் தைரியமாக காதலி சேர்த்துவையுங்கள்என்று சொல்லிவிட்டு தைரியமாக ஒதுங்கி நில்லுங்கள்.  இனி, காதலை வெற்றிபெற வைப்பது அவர்கள் கையில் முடிவு சுபமே!