இலங்கை சுற்றுலாத் துறைக்கு விழுந்த பலத்த அடி! நாட்டை விட்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள்!

#SriLanka #Tourist
Nila
4 years ago
இலங்கை சுற்றுலாத் துறைக்கு விழுந்த பலத்த அடி! நாட்டை விட்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள்!

மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ளதாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில்,

‘ஹோட்டல்களில் மின்வெட்டு ஏற்பட்டால் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பயணங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாமல் யால மற்றும் ஏனைய பூங்காக்களும் வேகம் குறைந்துள்ளன.

மேலும், ஹோட்டல்களில் உணவு தயாரித்தலுக்கும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் விரக்தியுடன் இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இது சுற்றுலாத் துறைக்கு பலத்த அடியாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4