விமல் - உதய கம்மன்பில தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது: எஸ்.பி

Prathees
4 years ago
விமல் - உதய கம்மன்பில   தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது: எஸ்.பி

விமல் வீரவன்ச உதய கம்மன்பில போன்றவர்களின் இழப்பு அரசாங்கத்திற்கு இழப்பு என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அவர்கள் பெரும் தியாகங்களை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர்களின் இரு கட்சி களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்குள் தான் முழுமையாக வளர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஆட்சியை விட்டு விலகி தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்றார்.

கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4