இலங்கையின் நெருக்கடி நிலைமையில் நாட்டுக்குள் நுழைந்த முக்கிய நபர்!
Nila
3 years ago

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றைய தினம்(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.



