மாட்டு வண்டியில் மாதாந்த அமர்வுக்கு பிரதேச சபைக்கு செல்லும் உறுப்பினர்கள்!

Mayoorikka
4 years ago
மாட்டு வண்டியில் மாதாந்த அமர்வுக்கு பிரதேச சபைக்கு செல்லும் உறுப்பினர்கள்!

நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று (10) மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றம் மற்றும் டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை காரணம் காட்டி இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பிரதேச சபை நோக்கி நகர்ந்து செல்கின்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்று இடம்பெறவுள்ள நிலையில் மாதாந்த அமர்வுக்கு மாட்டு வண்டியில் சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4