“குரு பார்க்க கோடி நன்மை’ இன்று வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு சிறப்பை தரும்.

#spiritual #God #Guru
“குரு பார்க்க கோடி நன்மை’  இன்று வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு சிறப்பை தரும்.

“குரு பார்க்க கோடி நன்மை’ என்பது ஜோதிட பழமொழி. குருவின் பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும். குரு இருக்கும் இடத்தை விட, அவரது பார்வைக்கு பலம் அதிகம். அவரின் 5,7,9 பார்வைகள் முறையே துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பதிகிறது. இதன் மூலம் இந்த மூன்று ராசியினருக்கும் சனியின் கெடுபலன் குறைந்து நன்மை அதிகரிக்கும்.

குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஐந்து ராசியினருக்கு நன்மையும், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மரகம், மீனம் ஆகிய ஏழு ராசியினருக்கு சுமாரான பலனும் நடக்கும். இந்த ஏழுராசியினரும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் நவக்கிரக மண்டபத்தில் உள்ள குருவுக்கு வெண்முல்லை மாலையும், மஞ்சள் வஸ்திரமும் சாத்தி வழிபடுவது அவசியம். வியாழனன்று விரதமிருந்து, அன்று மாலையில் தட்சிணாமூர்த்திக்கு கடலைப்பொடி அன்னம் நைவேத்யம் செய்து தானம் செய்யலாம்.

குருவின் அதிதேவதையான பிரம்மாவை வழிபடுவதும், குருவுக்குரிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் ஆலய தரிசனம் செய்வது நன்மைக்கு வழிவகுக்கும். சிவன் கோயிலில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, வில்வம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குவது நல்லது. நெய்தீபம் ஏற்றுவதும் சிறப்பு. வியாழக்கிழமைகளில், “”குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வரஹ குரு சாக்ஷõத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ” என்னும் ஸ்லோகத்தை 12 முறை சொல்லி வணங்கினால், குருவால் ஏற்படும் சிரமங்கள் குறையும்.

மிதுன ராசியில் சஞ்சரிக்கும் ஓராண்டுக்குள் குரு தலங்களான திருச்செந்தூர், ஆலங்குடி (திருவாரூர்), பட்டமங்கலம் (சிவகங்கை) தென்குடித்திட்டை (தஞ்சாவூர்), குருவித்துறை (மதுரை), ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று தரிசித்தால் கெடுபலன் நீங்கி நன்மை அதிகரிக்கு
குரு பரிகாரம் செய்ய ஏற்ற நாள் – நேரம்

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அத்தகைய குருவை முறைப்படி வழிபட்டால் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்வில் வளம் பெறலாம். வேலைவாய்ப்பு வழங்குவதிலும், தடைப்படும் திருமணம் விரைவில் நடைபெறவும் உதவி செய்பவர் குரு பகவான்.

குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பரிகாரம் செய்யலாம். வியாழக்கிழமை அன்று விரதமிருந்து குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் குரு பகவானை வழிபாடு செய்வதற்குக் குருபகவான் உச்சம் பெறும் ஆடி மாதமும், ஆட்சி பெறும் மார்கழி, பங்குனி மாதங்களும், குரு நட்சத்திரங்கள் ஆகிய விசாகம், புனர்பூசம், பூரட்டாதி வியாழக்கிழமைகளில், குரு ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்வது மிக, மிகச் சிறப்பாகும்.

வியாழக்கிழமையில் குரு ஓரை காலை 6மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பரிகாரம் செய்தால் நல்ல பலன் கிடைப்பது நிச்சயம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4