எதிரணியால் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்றவே முடியாது: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Prathees
4 years ago
எதிரணியால் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்றவே முடியாது: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

எதிரணியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எங்களுக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும் என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர்களின் வீடுகளைச் சுற்றிவளைப்பதற்கு ஹிருணிகா அழைப்பு விடுத்திருந்தார். அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையத்துக்கே சிறிய கூட்டமொன்றை அனுப்பிவைத்தோம்.
 
எதிரணியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எங்களுக்கும் பதிலடி கொடுக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எதிரணி என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்றவே முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4