2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இயேசு சிலை

Keerthi
3 years ago
2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இயேசு சிலை

உலக நாடுகளில் ஒரு பகுதியினர் இரு பிரிவுகளாக பிரிந்து, கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் 2ம் உலக போர் நடந்தது.  இந்த போரின்போது, உக்ரைனின் வீவ் நகரில் உள்ள ஆர்மீனியன் சர்ச் ஒன்றில் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலை, குண்டுவீச்சு உள்ளிட்ட தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஆலயத்தில் இருந்து நீக்கப்பட்டு மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையாக கடந்த 12 நாட்களாக ரஷிய ராணுவம் போரில் ஈடுபட்டு வருகிறது.உக்ரைனும் தனியாளாக அதனை எதிர்கொண்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, 2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக உக்ரைனின் வீவ் நகரில் இருந்து இயேசு சிலையை மறைவிடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.  இதனை கிழக்கு ஐரோப்பிய ஊடக அமைப்பு நெக்ஸ்டா இன்று தெரிவித்து உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!