வவுனியாவில் அதிசய மாடு - பார்வையிட குவியும் மக்கள்!
#Vavuniya
Nila
3 years ago

வவுனியால் முதல் முறையாக பசு மாடு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பகுதியில் முதன்முறையான இவ்வாறான அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பசு மாடொன்று ஒரு கன்றை ஈன்றுவது இயற்கை. சில சந்தர்ப்பங்களில் இரண்டு கன்றுகளையும் ஈன்றுள்ளன.
இந்நிலையில் மூன்று கன்றுகளை ஒரே நேரத்தில் ஈன்றுள்ளமையானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிசய சம்பவத்தை காண பெருமளவு மக்கள் பசு மாட்டின் உரிமையாளரின் வீட்டுக்கு சென்று வருகின்றனர்.



