நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் பேச்சு: இந்தியா முழு ஆதரவு
Mayoorikka
3 years ago

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இந்நிலையில், சுமுகமான கலந்துரையாடல் பலனளித்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டும் என்று இதன்போது உறுதியளித்துள்ளார்.
மேலும், இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.



