இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வழங்கிய எரிசக்தி அமைச்சு!

#SriLanka
Nila
3 years ago
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வழங்கிய எரிசக்தி அமைச்சு!

நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) வழமைக்கு திரும்புமென எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

நேற்றைய தினம் எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆயினும், நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிக தேவை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்புகளை மட்டுமே தொடர்ந்து விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!