ராஜபக்சக்களால் மட்டுமே உரிய தீர்வு காண முடியும்! - இந்திக அனுருத்த கூறுகின்றார்

#SriLanka #Mahinda Rajapaksa #Gotabaya Rajapaksa
ராஜபக்சக்களால் மட்டுமே உரிய தீர்வு காண முடியும்!  - இந்திக அனுருத்த கூறுகின்றார்

"நாட்டு மக்களுக்கு நியாயமானதை வழங்கவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ராஜபக்சக்களால் மாத்திரமே முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் மாத்திரமே பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல முடியும்."

- இவ்வாறு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு உண்மையான பிரச்சினைக்குப் பதிலளிக்கும் அரசியல் பிரமுகர்கள் இந்த நாட்டில் மிகக் குறைவு.

அவ்வாறு உண்மையான பிரச்சினைக்குத் தீர்வைக் காணக்கூடிய அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பாராயின் அது பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒருவரேயாவார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் மக்களுக்கு நியாயமானதை வழங்குபவர்கள் தற்போதைய பிரதமர் உட்பட இந்த ராஜபக்சர்களே தவிர வேறு யாரும் இல்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நாம் பொறுப்புடன் கூறுகின்றோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4