ரஷியாவில் டிக்டோக் செயலி நேரடி ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக டிக்டோக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், "போலி செய்திகளுக்கு" 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இந்த சட்டத்தின் மூலம், இராணுவத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன் ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்கும்.
இந்தநிலையில், ரஷியாவின் புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டிக்டோக் செயலி நிறுவனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக டிக்டோக் செயலி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பெரும் சோகத்தையும் தனிமைப்படுத்தலையும் எதிர்கொள்ளும் போரின் போது நிவாரணம் மற்றும் மனித தொடர்பை வழங்கக்கூடிய படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு பங்காக இருக்க விரும்புவதாகவும், மேலும் செயலியின் ஊழியர்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கூறியுள்ளது.
1/ We're working diligently and aggressively to support and protect the safety of our TikTok community as the war in Ukraine evolves. More ? https://t.co/hKwcvN2vkc
— TikTokComms (@TikTokComms) March 4, 2022



