புடின் - மோடி திடீர் பேச்சுவார்த்தை! உடன் உத்தரவிட்ட புதின்: என்ன காரணம்
Mayoorikka
3 years ago

உக்ரைனில் இந்திய மாணவர்களின் அவலநிலை குறித்து புடின், மோடி ஆகியோர் அவசரமாக கலந்துரையாடியுள்ளனர்.
உக்ரைனின் கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அவசரமாக வெளியேற்றுவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆயுத மோதல் மண்டலத்திலிருந்து இந்திய நாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதிசெய்ய ரஷ்ய வீரர்களுக்கு உத்தரவிட்டதாக இதன்போது புடின், மோடியிடம் கூறினார்.
எனினும் குறித்த மோதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



