இலங்கையில் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அமுலாகவுள்ள விசேட திட்டம்!
Nila
3 years ago

தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் சதொச விலைக்கு, கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு உரிய விலையை விடவும் அதிக கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறப்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



