சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு நீதி கோரி ஐ.நாவுக்குச் செல்கின்றது விவகாரம்
Mayoorikka
3 years ago

சமையல் எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்பட்ட மற்றும் காயமுற்றவர்களுக்கு நீதிகோரி, அகில இலங்கை பாவனையாளர் கூட்டமைப்பு இன்று, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்குள் சமையல் எரிவாயு அடுப்பு உப்பட உபகரணங்கள் வெடிப்பு சம்பவங்கள் 800வரை பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களில் 8 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வெடிப்பு சம்பவங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் காயமுற்றோருக்கும் இழப்பீடு வழங்கும்படி அரசிடமும், எரிவாயு நிறுவன முகாமையாளர் களுக்கும் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.
இதனால் ஐக்கிய நாடுகள் சபையை நாடவுள்ளதாக கூட்டமைப்பின் செயலாளர் மிலிந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.



