“ரஷ்யாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர்ந்தேனா?" - உக்ரைன் மிஸ் அழகி டுவீட்டில் விளக்கம்
Prasu
3 years ago

உக்ரைன் நாட்டில் மிஸ் அழகி பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா, அந்நாட்டு ராணுவத்தில் இணைந்ததாக பரவிய தகவல் வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் ராணுவ உடையில் லென்னா இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. மேலும், ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களத்திற்குச் செல்ல அவர் தயாரானதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தான் எந்த ராணுவத்திலும் சேரவில்லை என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் ராணுவத்தில் உள்ள பெண் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் பொம்மை துப்பாக்கியுடன் புகைப்படத்தை பதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்



