நவாலியில் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டில் ஈடுபட்ட கும்பல்: ஒருவர் மடக்கி பிடிப்பு!

Prathees
3 years ago
நவாலியில் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டில் ஈடுபட்ட கும்பல்: ஒருவர் மடக்கி பிடிப்பு!

யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று (02) அதிகாலை 3.20 மணியளவில் திருச்சபை வீதி நவாலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றினுள், வாள்வெட்டு குழு ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது.

குறித்தவீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தின் மீது பெற்ரோல் குண்டு தாக்குதல் நடத்திய குறித்த குழுவினர், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளைஅடித்து நொறுக்கி, வீட்டிலிருந்த இளைஞனின் மீது தாக்குதல் நடாத்த முற்பட்ட வேளை இளைஞன் தப்பித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞனின் தந்தையான நடராசா அருள் றொபின்சன் (வயது 48) என்பவர் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அயலவரின் உதவியுடன் வாள்வெட்டு கும்பலில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபரை மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!