இன்று காலை தனது வீட்டிற்கு முன்பாக பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

#SriLanka #Women
இன்று  காலை தனது வீட்டிற்கு முன்பாக பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

இன்று (02) காலை தனது வீட்டிற்கு முன்பாக பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

பதுரலிய கெலின்கந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இது இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் பதுரலிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்திரலதா பத்மினி என்ற 53 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருடன் சிறிது காலம் ஒரே வீட்டில் வசித்து வந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்குமிடையிலான தனிப்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக மத்துகம பலுகா வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 38 வயதுடைய பெண்.

இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அவரது கணவரைக் கொல்வதற்காக வீட்டிற்கு வந்துள்ளனர், அங்கு அந்தப் பெண் சுடப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!