இலங்கைக்கு 05ஆம் திகதி முதல் வெளிச்சம்! – வெளியானது அரசின் அறிவிப்பு!
Nila
3 years ago

எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய, மூடப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக மேலதிக எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



