அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Mayoorikka
3 years ago

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.
வர்த்தகர்கள் சிலர், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.



