கல்கிசையில் விபச்சார விடுதியை சுற்றிவளைப்பு: 6 பெண்கள் கைது

Prathees
3 years ago
கல்கிசையில் விபச்சார விடுதியை சுற்றிவளைப்பு:  6 பெண்கள் கைது

ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் கல்கிசை விஜேசிறிவர்தன வீதியில் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அதன் முகாமையாளர் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி மாலை இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

விடுதியின் முகாமையாளர் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம், புத்தளம், ஹட்டன், யட்டியந்தோட்டை மற்றும் தங்கந்த ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையத்திற்குச் சென்ற நபர் ரூ.1000 பணம் செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்கிசை தலைமையக பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!