புகையிரதங்களுக்கு இன்னும் 3 நாட்களுக்கு எரிபொருள் உள்ளது!
Prathees
3 years ago

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த புகையிரதம் எரிபொருளில் இயங்குவதற்கு இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடம்கொட நேற்று தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக ரயில் சேவைகளை மட்டுப்படுத்துமாறு ரயில்வே திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோகம் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததால் புகையிரத திணைக்களத்திற்கு எரிபொருள் விநியோகம் தாமதமாகியுள்ளது.
அதன்படி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ரயில் இயக்க மட்டுமே எரிபொருள் உள்ளது.
ரயில் சேவையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒரேயடியாக முழு ரயில் சேவையும் தடைபடும்.
ரயில்வே அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.



