ரஷியாவுடன் 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்: உக்ரைன் அதிபர்

Reha
4 years ago
ரஷியாவுடன் 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்: உக்ரைன் அதிபர்

பெலாரஸில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-  ரஷியா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.  உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன்- ரஷியா இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷியா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.

சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. பேச்சுவார்த்தைகள் ஐந்து மணி நேரம் நீடித்ததாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளரும் அந்நாட்டு தூதுக்குழு தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்தார்.

இந்த நிலையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், ராக்கெட் மூலம் கார்கீவ் நகரை ரஷியா தாக்கி வருகிறது. குடியிருப்புகள் மீது ராக்கெட் குண்டு வீச்சு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷியா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4