இலங்கையில் மின் தடை தொடர்பில் நிதி அமைச்சர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
#SriLanka
#Basil Rajapaksa
Nila
3 years ago

எதிர்வரும் ஐந்து நாட்களின் பின்னர் மின் தடை செய்வதனை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளன.
புகையிரத திணைக்கள களஞ்சியசாலைகளிலும் எரிபொருளை சேமிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



