தொழில்களை அழித்ததாக இங்கிலாந்து பிரதமரை சாடும் முன்னாள் நடன அழகி

இங்கிலாந்து நாட்டின் நார்தம்ப்டன் பகுதியில் வசித்து வருபவர் ரிஹானாப் (வயது 44). முன்னாள் இங்கிலாந்து ரக்பி வீரரான பென் கோஹனுடனான (வயது 43) உறவில் இவர்களுக்கு 5 வயது மகள் உள்ளார். ஸ்ட்ரிக்ட்லி என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்த இருவரும் அதன்பின் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். இவர்கள் யோகா, உடற்பயிற்சி அளிக்கும் மையம் நடத்தி வருவதுடன் நடன அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார். இங்கிலாந்தில் ஊரடங்கு முடக்கம் ஏற்பட்டதில் இவரது நிதி நிலைமை மோசமடைந்தது. ரிஹானாப் ரஷிய போர் வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார்.
உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ள சூழலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய குடும்பம் மற்றும் ஆயிரக்கணக்கானோரின் வர்த்தகம், கடந்த 2 ஆண்டு ஊரடங்கு உத்தரவால் முடங்கி போனது. என்னுடைய நண்பர்கள் பலரின் தொழில் முடங்கியுள்ளது. 2 ஆண்டுகளாக எந்த வர்த்தகமும் இல்லாமல் கடனாளி ஆகியுள்ளோம். எங்களுடைய தொழில்களை அழித்த போரிஸ் ஜான்சனுக்கு என்ன தண்டனை அளிக்கப்பட உள்ளது என்பதில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.
உக்ரைன் பத்திரிகையாளர் ஒருவர் தனது தாய் வேறு நாட்டுக்கு தப்பி சென்றது பற்றி பதிவிட்டதற்கு பதிலடியாக, உக்ரைன் நாட்டு தேசியவாதிகளால் ஒவ்வொருவரும் பாதிப்படைந்தது பற்றி ஏன் செய்தி வெளியிடவில்லை என தனது பதிவில் ரிஹானாப் கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு தெரிந்து, உக்ரைனில் அமைதியாக குடும்பங்களாக வாழ்ந்த ரஷியர்களை 8 ஆண்டுகளாக ரஷிய மொழியை பேச விடாமல் தடுத்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார். போர் வேண்டுமென தேசங்கள் விரும்புகின்றன. அது லாபமளிக்கும் என அவர்களுக்கு தெரியும். எல்லாவற்றையும் விலையாக கொடுத்து, போர் நடக்கட்டும் என்பது உறுதி செய்யப்படட்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.



