மேல் மாகாணத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளோரின் தகவல்களை சேகாிக்கும் காவல்துறை!

#SriLanka #Police
Nila
3 years ago
மேல் மாகாணத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளோரின் தகவல்களை சேகாிக்கும் காவல்துறை!

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 123 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 11,188 பேரின் தகவல்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
 
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மேல் மாகாணத்திற்கு வந்து தங்கியுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களில் 20 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து மாகாணத்தில் உள்ள ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இந்தத் தகவல் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!