இலங்கையில் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளைத் தேடிச் செல்லும் உதயங்க
Prathees
3 years ago

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள உக்ரேனியர்களின் நலம் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அளுத்கம கிளப் பெந்தோட்டை சுற்றுலா விடுதிக்கு விஜயம் செய்த அவர்இ தற்போது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் உக்ரேனியர்களின் நலம் குறித்து கேட்டறிந்தார்.



