வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது ஏறிய ராணுவ டாங்கி - அதிர்ச்சி வீடியோ

Nila
4 years ago
வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது ஏறிய ராணுவ டாங்கி - அதிர்ச்சி வீடியோ

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. 

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்-வில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது ராணுவ டாங்கி ஏறிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராணுவ டாங்கி உக்ரைனை சேர்ந்ததா? அல்லது ரஷியாவை சேர்ந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிரே வந்த ராணுவ டாங்கி வேகமாக மோதியது. இதில், ராணுவ டாங்கிக்கு அடியில் கார் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி வந்த முதியவரும் அதில் சிக்கிக்கொண்டார். 

அதன்பின்னர், சில வினாடிகள் கழித்து ராணுவ டாங்கி காரில் இருந்து கிழே இறங்கி முன்னேறி சென்றது. இதையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களில் சிலர் சிதைந்த காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ராணுவ டாங்கி ஏறியதில் கார் உருகுலைந்தபோதும் காரில் இருந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ராணுவ டாங்கி கார் மீது ஏறுவதும், காரில் சிக்கிய முதியவரை மீட்கும் வீடியோவும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4