யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் புகையிரத நிலைய கடவையில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு

Mayoorikka
3 years ago
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் புகையிரத நிலைய கடவையில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் புகையிரத நிலைய கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை  நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம்  இன்று நண்பகல் 12 மணியளவில் மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை கடக்க முற்பட்ட போது, குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் புகையிரத கடலையை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது கடுகதி புகையிரதம் இளைஞரை மோதி தள்ளியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் விறகு கட்டிக்கொண்டு சென்றதாகவும், இளைஞர் யார் என்று அடையாளம் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!