ரஷ்யா உடன் போரிடும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Mayoorikka
4 years ago
ரஷ்யா உடன் போரிடும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.

இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ரஷ்யாவின் தொடர் நடவடிக்கைகளும் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலே உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவுடன் போரிடும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜோ பைடன் மேலும் கூறுகையில்,

ரஷ்யாவுடன் போரிடும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இருப்பினும், நாங்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப விரும்புகிறோம், அது என்னவெனில் அமெரிக்கா தங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து நேட்டா பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்ப்போம் என்பதே. உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய ராணுவ தாக்குதலை ரஷ்யா முன்னெடுக்கும் என நம்புகிறோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4